மேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ
- IndiaGlitz, [Tuesday,December 22 2020] Sports News
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தூக்கி அடித்த பந்து மேலே சென்று போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிராவை பலமாக தாக்கி கீழே விழுந்ததால் அவரது விக்கெட் காப்பாற்றப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த இந்த போட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டி ஒன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடியது. 16.1 ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த போட்டியின்போது அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல், க்ருனல் பாண்டியா வீசிய 16 ஓவரின் கடைசிப் பந்தை சிக்சருக்கு தூக்கிய அடித்தபோது, பந்து மேலே இருந்து போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிராவை பலமாகத் தாக்கி கீழே விழுந்தது. ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிராவை தாக்கவில்லை என்றால் அது கேட்சாக மாறி அவரது விக்கெட் விழுந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டியில், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.