செல்பி மோகத்தால் நடு ஆற்றில் சிக்கிய இளம்பெண்கள்: போராடி காப்பாற்றிய மீட்புக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் தலைவிரித்தாடி வருகிறது. செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் உயிரை இழந்து வரும் பரிதாபமான செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் செல்பி மோகத்தால் நடு ஆற்றில் சிக்கிய இரண்டு இளம்பெண்களை மீட்புக்குழுவினர் காப்பாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா என்றா பகுதியில் பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வெள்ள நீர் ஓடி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதையும் பொருட்படுத்தாது பலர் வெள்ள நீரை வேடிக்கை பார்க்க அந்த ஆற்றை சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு இளம்பெண் ஆற்றில் குறைவான அளவில் தண்ணீர் போய்க் கொண்டிருந்த இடத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றனர்.
செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கி அங்கிருந்த ஒரு பாறை ஒன்றின் மேல் ஏறி அவர்கள் செல்பி எடுத்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி அவர்கள் நின்றிருந்த பாறை மூழ்குமளவு நீர்மட்டம் அதிகரித்துவிட்டது. இதனால் அதிர்ந்த அடைந்த அந்த பெண்கள் உடனே உள்ளூர் போலீசாருகு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர்களுடன் வந்த போலீசார் கயிற்றை கட்டி ஆற்றில் இறங்கி இரண்டு பெண்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com