மழையை விட மேட்ச்தான் முக்கியமா? தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்!

ஃபானி புயல் காரணமாகவும், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதன் காரணமாகவும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருவதால் ஓரளவு குளிர்ச்சி காணப்படுகிறது. சென்னையிலும் மாலை முதல் மேகமூட்டமாக இருந்ததால் மழை வரும் அறிகுறி தெரிந்ததே. ஆனால் இன்று சென்னையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் போட்டி இருப்பதால் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகள் இன்று மழை வேண்டாம் என்று வருண பகவானுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் 'ரெயின் ரெயின் கோ அவே' என்ற பாடலையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவுகளை பார்த்து அவ்வப்போது துல்லியமாக வானிலை நிலவரங்களை தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன், 'ரெயின் ரெயின் கோ அவே என்ற வேண்டுதலை பார்த்து ஆச்சரியம் அடைகிறேன். மழை முக்கியமில்லை போல, மேட்ச்தான் வேணும் போல' என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

More News

யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட அதிரடி டைட்டில்

ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கின்றதோ, அதே அளவு வரவேற்பு தற்போது வெப் சீரீஸ்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

'சன்' நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படமான 'எஸ்கே 16' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

'எஸ்.கே 16' படத்தில் இணைந்த இரண்டு பிரபல இயக்குனர்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அவருடைய 16வது படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்!

நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியின் 'எதிர்பார்த்த' டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று