மேட்ச் பிக்சிங்: ஐபிஎல் அணி வீரரை அணுகிய நபர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது மேட்ச் பிக்சிங் நடப்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக ஐபிஎல் போட்டியின்போது கடந்த காலங்களில் அதிக அளவில் மேட்ச் பிக்சிங் நடந்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்வதற்காக ஐபிஎல் அணி வீரர் ஒருவரை மேட்ச் பிக்சிங் மோசடி நபர் ஒருவர் அணுகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது 16 போட்டிகள் முடிந்து இருக்கும் நிலையில் இதில் ஒரு போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய உதவுமாறு தன்னை ஒருவர் அணுகியதாக வீரர் ஒருவர் ஐபிஎல் ஊழல் தடுப்பு பிரிவில் கூறியுள்ளார். இதனையடுத்து மேட்ச் பிக்சிங்கிற்கு முயற்சித்த அந்த நபரை கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் ஆதாரத்துடன் பிடிபடுவார்கள் என்றும் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துதல் காரணமாக தற்போது வீரர்களை நேரடியாக நெருங்க முடியவில்லை என்பதால் ஆன்லைன் மூலம் மேட்ச் பிக்சிங் செய்பவர்கள் வீரர்களை அணுகி வருவதாகவும் இவைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஊழல் தடுப்பு பிரிவு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
கடந்த சில நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் சில போட்டியின் முடிவுகளில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளதால் மேட்ச் பிக்சிங் இருந்துள்ளதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments