நடராஜன் தான் உண்மையான ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 195 என்ற இலக்கை எட்டிய இந்தியா அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்றைய போட்டியில் மிக அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா இந்திய வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 22 பந்துகளில் 42 ரன்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்ற போது ’டி20 போட்டிகளில் பொருத்தவரை கடைசி 5 ஓவர்களில் 80 முதல் 100 ரன்கள் எடுப்பது என்பது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் நான் நம்பிக்கையுடன் விளையாடினேன்.
மேலும் நடராஜன்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்வார் என்று நினைத்தேன். அவர் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் 10 ரன்களுக்கும் மேல் இலக்கை குறைத்தார். மேலும் இங்கே பந்துவீச்சாளர்கள் திணறுகின்றனர். ஆனால் அவர் உண்மையாகவே சிறப்பாக பந்துவீசினார். எனவே உண்மையான ஆட்டநாயகன் நடராஜன் தான் என்று ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டினார்.
இன்றைய போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com