ஓடிடியில் 'மாஸ்டர்' ரிலீஸா? தயாரிப்பு தரப்பின் அதிகாரபூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், திரை அரங்குகள் திறந்த உடன் தான் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர்,.
ஆனால் சமீபத்தில் அமேசான் பிரைம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது விளக்கம் அளித்துள்ளது
அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் விளம்பரத்தில் உள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கொரிய மொழி திரைப்படம் என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ திரைப்படம் அல்ல என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, அப்போதுதான் வெளியாகும் என்பது தற்போது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது
It is 2016 Korean film #Master listed on Amazon Prime and not #ThalapathyVijay ’s #Master!! We will have a grand theatrical release ???? https://t.co/ncTTW5lttc
— Seven Screen Studio (@7screenstudio) August 4, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout