லீக் ஆனதா 'மாஸ்டர்' விஜய்யின் கதாபாத்திரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஒரு குடிகார புரபொசர் கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கண் பார்வை பாதித்த கேரக்டரிலும் நடித்து உள்ளதாக தெரிகிறது
அதிக அளவு ஆல்கஹால் பழக்கம் இருந்ததால் விஜய் கேரக்டரின் கண்பார்வை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் இந்த படத்தில் முதன்முதலாக தளபதி விஜய் கண்பார்வை குறைவு உள்ள ஒரு கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது
மேலும் இந்த படத்தில் இதுவரை வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்பட அனைத்து போஸ்டர்களிலும் விஜய் கருப்பு கண்ணாடி அணிந்து இருப்பதும் இந்த சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள கண்பார்வை குறைவற்றவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது என்பதும் இந்த கேரக்டருடன் ஒத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மங்கலாக இருந்ததும், கண்பார்வை குறைவற்றவர் என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே என்றும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த கொரியன் திரைப்படமான ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்தின் தழுவல் தான் ‘மாஸ்டர்’ திரைப்படம் என்று கூறப்படுவதும் ’சைலன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகன் கண்பார்வை குறைவு ஒருவராக நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் கேரக்டர் இண்டர்நெட்டில் லீக் ஆகியிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
Ithuthana story!? ???? pic.twitter.com/9YCu4PJ1pW
— Kumar Krish (@Kumarkrish97) November 12, 2020
Appuram enna pa? partially blind alcoholic nu arivichidalaama ??????@Mystic_Riverr @welluhhhhh@isriram__ @Highonfilmss @arjunvish7 #Master pic.twitter.com/WggLD4lgRz
— ArunAshok (@arun661) November 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments