'நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சுடலாமா'? விஜய் கேள்வியால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. நெய்வேலி படப்பிடிப்பின்போது வருமான வரித்துறை அலுவல அதிகாரிகளின் ரெய்டு, மற்றும் பாஜக தொண்டர்கள் போராட்டம் என பரபரப்பை ஏற்படுத்தி இந்த படத்திற்கு இலவச விளம்பரம் தேடித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த அப்டேட் குறித்த செய்தி மிக விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நண்பா ’நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சுடலாமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
விஜய் தரப்பில் இருந்து இந்த கேள்வியை எழுதப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டு விஜய் ரசிகர்கள் இதற்கு அதிரடியாக பதில்களை கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர். ’இறங்கி அடிக்கலாம் தலைவா வா’ ’தலைவா வா’ போன்ற கமெண்ட்டுகள் கு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் அதிரடி அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Nanbaa, Namma aataththa aarambichuralama? ?? Exciting updates on the way!
— XB Film Creators (@XBFilmCreators) February 11, 2020
Keep guessing. #MasterUpdate@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah @gopiprasannaa pic.twitter.com/2Yu97KVfUT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments