'டிசைன் டிசைனா அப்டேட்':'மாஸ்டர்' கொண்டாட்டம் ஆரம்பம்!

  • IndiaGlitz, [Saturday,March 07 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் , விஜய்சேதுபதி உள்பட இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலைகளும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்பதும் இந்த படத்தில் 90% வியாபாரம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைப்பக்கத்தில் ஒரு அப்டேட் பதிவு செய்யப்பட்டுள்ளது

அதில் ’டிசைன் டிசைனா அப்டேட், விரைவில் வெளி வர இருக்குது, கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி’என்று குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ’மாஸ்டர்’ கொண்டாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என்ற ஒரு ஏழு நொடி வீடியோ ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து அடுத்தடுத்து மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் வெளிவர உள்ளது இருக்கிறது என்பதால் விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இண்டர்நெட்டை கலக்கும் கீர்த்தி பாண்டியனின் நீச்சலுடை புகைப்படங்கள்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் 'தும்பா' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் விரைவில் அவர் தனது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து

இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்: கலைப்புலி எஸ்.தாணு

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான 'சிறைச்சாலை' என்னும் பிரமாண்டமான திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்: காங்கிரஸ் எம்பி அதிரடி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும் விரைவில் அவர் தனது ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை வெளியிடுவார்

5 மொழி திரைப்படத்தில் ப்ரியா பவானிசங்கரை அடுத்து இணைந்த பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்று, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது

டியர் மோடி.. என்னைக் கொண்டாட வேண்டாம்..! பிரதமரின் மகளிர் தின மரியாதையை நிராகரித்த சிறுமி.

என்னுடைய குரலைக் கேட்க தயாராய் இல்லாததால் நீங்ககள் தரும் இந்த மரியாதை எனக்கு வேண்டாம். உங்களுக்கு நன்றி.