'மாஸ்டர்' டிராக்லிஸ்ட் இணையத்தில் லீக்? அதிர்ச்சியில் படக்குழு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஒரு திரைப்படம் இண்டர்நெட்டில் லீக் செய்யப்படாமல் உருவாக்குவது, ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகி விட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது
மாஸ்டர் படத்தில் 7 பாடல்கள் இருப்பதாகவும் அந்த பாடல்கள் குறித்த விவரங்களும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா? அல்லது நெட்டிசன்களின் போட்டோஷாப் வேலையா? என்பதே தற்போது அனைவரது கேள்வியாக உள்ளது. இதுகுறித்து விரைவில் மாஸ்டர் படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது
True or fake ??#mastertracklist #master pic.twitter.com/fTwisAvkPB
— Aadhi (@aadhi1122) January 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com