நாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் விஜய்- விஜய்சேதுபதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் 2 போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மூன்றாம் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த மூன்றாவது லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இருப்பார்கள் என்ற தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நாளையும் சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் என்பது உறுதியாகி உள்ளது