'மாஸ்டர் தி பிளாஸ்டர்': 'மாஸ்டர்' படத்தின் சக்சஸ் பாடல் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 55 கோடி வரை வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபலங்களின் படங்கள் வெற்றி பெறும்போதும் சக்சஸ் மீட் கொண்டாடி வரும் நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் சக்சஸ் மீட் வித்தியாசமாக கொண்டாட விரும்பிய ‘மாஸ்டர்’ குழுவினர் ’மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற பாடலை வெளியிட்டு உள்ளனர்.

‘மாஸ்டர்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை Bjorn Surrao என்பவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அட்டகாசமாக அமைந்துள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த பாடலை ‘மாஸ்டர்’ படத்தின் சக்சஸ் மீட் பாடலாகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.