தீபாவளி விருந்தாக வரும் விஜய்யின் 'மாஸ்டர்': ரசிகர்கள் உற்சாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஏப்ரல் 9 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ள நிலையில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது
ஏற்கனவே நேற்று சமூக வலைதளங்களில் ‘மாஸ்டர்’ டீசர் குறித்த ஹேஷ்டேகுகள் வைரல் ஆனதால், ‘மாஸ்டர்’ டீசர் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றின் மூலம் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் உள்பட சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் அறிவிப்பு தற்போது வெளிவந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Enna Maapi, Sowkiyama! The wait is over. Finally, Vaathi coming oththu! ??
— XB Film Creators (@XBFilmCreators) November 12, 2020
Update loading. . .#Master #MasterUpdate pic.twitter.com/6mqgN3InIs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com