பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கொங்க செல்லம்: 'மாஸ்டர்' டீசர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

முதல்கட்டமாக இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கங்க செல்லம்’ என்ற வசனம் இருப்பதால் இந்த படத்தில் இடம்பெறும் வசனங்களில் இதுவும் ஒன்று என கருதப்படுகிறது

'மாஸ்டர்' படத்தின் டீசர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி அன்று மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

More News

US: கமலா ஹாரிஸ், செலின் கவுண்டர் இவர்களைச் சுற்றும் சில திடுக்கிடும் விமர்சனங்கள்!!!

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸ் தன்னுடைய வெற்றிக்குப் பின்னர்

ஜிவி பிரகாஷின் அடுத்த ஆங்கில ஆல்பம்: மீண்டும் கைகொடுக்கும் தனுஷ்!

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் ’கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே

பெண் காவலருடன் லிவிங் டுகெதர்: திடீரென தற்கொலைக்கு முயற்சித்த வாலிபரால் பரபரப்பு!

பெண் காவலர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வந்த வாலிபர் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தண்ணீருக்கடியில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், தற்போது அவர் மாலத்தீவில் கணவருடன் தேனிலவு கொண்டாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே 

வேலை வெட்டி இல்லாதவர் ஸ்டாலின்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!!!

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10 ஆம் தேதி திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற காணொலி காட்சியில் கலந்து கொண்டு பேசினார்.