'வருகிறார் வாத்தி': 'மாஸ்டர்' படத்தின் புதிய அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதற்கு முன்னரே ஒரு அட்டகாசமான அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ’மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’ஒரு குட்டி கதை’ பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ’மாணவர்களே வாத்தி இஸ் கம்மிங்’ என்று ’மாஸ்டர்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த பாடலை வரவேற்க விஜய் ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகியுள்ளனர் என்பதும் நாளை மாலை சமூக வலைத்தளங்கள் தெறிக்க போகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Students!! Vaathi is coming! ??
— XB Film Creators (@XBFilmCreators) March 9, 2020
Master Second Single is releasing tomorrow at 5pm. #VaathiComing #MasterSecondSingle #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah @gopiprasannaa pic.twitter.com/wVdTKkBnmA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com