'மாஸ்டர்' படத்தின் அட்டகாசமான அப்டேட்: விஜய் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும்’மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் வரும் 16ஆம் தேதி விஜய்சேதுபதியின் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகிய ஜெகதீஷ் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியாகி இது குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்
ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நாளை வெளிவர உள்ளது என்பதால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நாளை இரட்டை கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
Indha pongal namaku semma treat ma! ????
— XB Film Creators (@XBFilmCreators) January 14, 2020
Revealing the second look poster of #Master tomorrow at 5 pm.
Gear up for #MasterPongal #MasterHasArrived #MasterUpdate@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ pic.twitter.com/WAhVdkbTul
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments