சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தில் இணைந்த 'மாஸ்டர்', 'கைதி', நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’மாஸ்டர்’, ’சர்கார்’, மற்றும் கார்த்தி நடித்த ’கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 21’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.
காஷ்மீரில் தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ள நிலையில் தற்போது ’சர்கார்’, ’மாஸ்டர்’, ’கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் லல்லு இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் அவருக்கு முக்கிய கேரக்டரை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான 'ரங்கூன்’ படத்தில் லல்லு ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
It's been 7 years since Rangoon, and I'm grateful to be a part of your first film. Looking forward to our next project together, #SK21. You've been my support and mentor, and I'm forever grateful Na.@Rajkumar_KP ❤️ pic.twitter.com/6fzh7fXft6
— Lallu (@lalluTweets) June 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments