தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,September 12 2020]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அது முதல் கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த படம் அவ்வப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் வதந்திகளுக்கு அவ்வப்போது விளக்கம் அளித்த ’மாஸ்டர்’ படக்குழுவினர் இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் முதலில் வரும் என்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் தெரிவித்தனர்
இருப்பினும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தி, மீண்டும் ஒருமுறை தற்போது வெளிவந்திருக்கிறது. முன்னணி ஓடிடி தளம் ஒன்று ’மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கி விட்டதாகவும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் விளக்கம் அளித்த படக்குழுவினர் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன என்பதும் ‘டெனட்’ உள்பட பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்தியாவிலும் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் தியேட்டரில்தான் வெளியாகும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்