தளபதியின் 'மாஸ்டர்' ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்களின் பார்வை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததும், திரையரங்குகள் பிறந்த பின்னரும் ஆடியன்ஸ் வருகையின்மையால் அவதிப்பட்டு இருந்ததும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக இருந்த நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவது மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து தங்கள் மகிழ்ச்சியை திரையரங்க உரிமையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நெல்லை ராம் முத்துராம் திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலை இருமுறை திரையிட முடிவு செய்திருக்கிறோம் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேபோல் கோயம்பேடு ரோகிணி தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ திருவிழாவை இப்போது ஆரம்பித்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் குரோம்பேட்டை உள்ள வெற்றி திரையரங்கு உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படத்தையும் ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு ஒரு சில விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
’மாஸ்டர்’ படத்தை திரையிடும் போது உங்களுக்கு ஈஸ்வரன் திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுத்தது யார்? என்றும் ’மாஸ்டர்’ திரைப்படத்தை மட்டுமே இரு திரையரங்குகளில் திரையிட விட்டால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி தியேட்டருக்கு கிடையாது என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுநிலையான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றது போல், திரையரங்குகள் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களுக்கும் வாய்ப்பு அளித்து இரண்டையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
This is how Distributors WARN ?? Theatres !!#MasterFilm ??
— + M.G.N SFC + (@MGN2532A) January 2, 2021
But imagine the Movie which is to be Clashed with it #EeswaranAudioLaunch ??♂️
இந்த பொழப்புக்கு பேசமா சூர்யா அண்ணா #SooraraiPottru மாதிரி லயே ரிலீஸ் பண்ணலாம்
— ∆KS SFC ™ (@Aks_meme) January 2, 2021
இப்படி அடுத்தவன் அடிச்சு பிழைப்பது என்ன பொழப்பு இதுக்கு 4 பேர் மூத்திரத்தை குடிக்கலாம்
Not a proper way to tweet though ur a distributor ?? I really feel sorry for the genuine theatre owner @VettriTheatres
— Pavithran (@Pavithran_1996) January 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com