'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
- IndiaGlitz, [Friday,February 14 2020]
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரான ஜான் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், தற்போது அந்த படம் லலித் குமார் என்பவரிடம் கைமாறி விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லலித்குமார் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு வெளிவந்தது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தயாரிக்க தான் இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக லலித்குமார் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் மாஸ்டர் படத்தின் அடுத்த படமாக இந்த தயாரிப்பாளரின் படமாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to be associated with this project ?? #kaathuvaakulaRenduKaadhal #KRK@vijaysethuoffl #Nayanthara @samanthaprabhu2 @vigneshShivn @anirudhofficial @Rowdypictures @iamarunviswa @gopiprasannaa @sureshchandraa @proyuvraaj pic.twitter.com/DIYpWardov
— Lalitkumar (@Lalit_SevenScr) February 14, 2020