'மாஸ்டர்' படத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையால் 'ஈஸ்வரன்'க்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் எனில் அந்த படம் வெளியாகி ஐந்து நாட்களுக்கு வேறு எந்த படத்தையும் புதியதாக திரையிடக்கூடாது என்று ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் திரையரங்குகளுக்கு நிபந்தனை விதித்து உள்ளதாகவும் இந்த நிபந்தனைகளுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே பொங்கல் விருந்தாக வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த ’ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வரும் என்றும் அதனால் விஜய் படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தது விடுத்ததை அடுத்து இந்த நிபந்தனையை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout