ஓடிடியா? தியேட்டரா? 'மாஸ்டர்' படக்குழு விளக்கம்!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த படத்தின் ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீசாகும் என கூறப்பட்டது

ஆனால் திடீரென நேற்று முதல் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டதால் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ’மாஸ்டர்’ போன்ற மாஸ் நடிகரின் படங்கள் திரையரங்குகளில் வந்தால் மட்டுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படக்குழு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது; ’மாஸ்டர்’ திரைப்படம் உறுதியாக தியேட்டரில்தான் வரும் என்றும் பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறியுள்ளது. எனவே ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் என்ற தகவல் வதந்தி என்றே கருதப்படுகிறது. இருப்பினும் இனி வரும் நாட்களில் என்ன நடக்கின்றது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்