தீபாவளிக்கு 'மாஸ்டர்' இல்லை: பொங்கலுக்காவது வருமா? தயாரிப்பாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி திறக்க உள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் திரையரங்குகள் திறந்து விட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்கப்படுவதால் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் பேட்டியளித்த மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார், ‘தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ வெளியீடு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்பதை கால சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் லலித்குமார் கூறியுள்ளார்

மேலும் இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் மட்டும்தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் இன்னும் பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கவில்லை. ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக வேண்டிய ஒரு பெரிய படம் என்பதால் தான் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் தீபாவளியை மிஸ் செய்த ‘மாஸ்டர்’, பொங்கலுக்காவது வரவேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது

More News

தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது

திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி-சனம்ஷெட்டி ஆவேச மோதல்: வேடிக்கை பார்க்கும் அர்ச்சனா குரூப்!

பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி, எட்டி உதைத்ததால் பொங்கி எழுந்த பாலாஜி ஆத்திரத்துடன்  பேசி வருகிறார். பாலாஜி மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த

டிரெண்டான தோனியின் ஒரு வார்த்தை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் முடித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கிளம்பு எதிர்ப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்குமா???

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது