'மாஸ்டர்' படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு: விஜய் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. அனிருத் இசையில் உருவான இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது குட்டி ஸ்டோரி என்ற பாடலின் தெலுங்கு வடிவமான ‘சிட்டி ஸ்டோரி’ என்ற பாடல் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தெலுங்கு மாநிலங்களிலுள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது
இந்த பாடலை வரவேற்க ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழில் ’மாஸ்டர்’ படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#ChittiStory ku nuvvu ready-ah? ??
— XB Film Creators (@XBFilmCreators) December 24, 2020
The Telugu version of #KuttyStory is releasing tomorrow at 12.15 PM. #MasterTelugu @actorvijay @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficial @MalavikaM_ @SunTV @EastCoastPrdns @Jagadishbliss @Lalit_SevenScr pic.twitter.com/bxtTlP4sHj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments