'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அட்டகாசமான தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,January 28 2020]

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஷிமோகா ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன தெரிகிறது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் நீண்ட சென்னை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் நெய்வேலி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெய்வேலியில் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு முந்தைய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து மீண்டும் சென்னை திரும்பும் படக்குழுவினர் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க உள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

More News

ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதாக சென்னை ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்

ரசிகரின் மொபைல் போனை உடைத்த சல்மான்கான்: வைரல் வீடியோ

பிரபலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் சில பிரபலங்கள் கோபப்பட்டு ரசிகர்களின் செல்போன்களை தட்டிவிட்டு உடைத்து விடுவதும் உண்டு 

கொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு

கொரோனா வைரஸ் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற நிலையில் இலங்கையில் பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணுவிஷால்: வைரலாகும் வீடியோ

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு

பட்டாக் கத்தியை வைத்து தங்களுடைய பிறந்த நாள் கேக்கை வெட்டும் ரவுடிகள் கைது செய்யப்படும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.