'மாஸ்டர்' படத்தின் 5 நாட்கள் வசூல்: உலக அளவில் சாதனையா?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும் நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் மூன்றாம் நாளிலிருந்து குடும்ப ஆடியன்ஸ்களும் திரையரங்குகளில் குவிந்ததால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் உலக அளவில் ரூபாய் 147 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 81 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ரூபாய் 7.3 கோடியும், கர்நாடகாவில் ரூபாய் 12.5 கோடிக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூபாய் 17 கோடியும் வட இந்தியாவில் ரூபாய் நான்கு கோடியும் வெளிநாடுகளில் ரூபாய் 25 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் வேறு எந்த பெரிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகாததால் உலக அளவில் கடந்த சில நாட்களில் மிக அதிக வசூல் செய்த திரைப்படம் ’மாஸ்டர்’ படம் தான் என்று விஜய் ரசிகர்கள் பெருமிதமாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரம்யா, ஷிவானிக்கு விழுந்த ஓட்டுகள் கூட கமலுக்கு கிடைக்காது: அதிமுக பிரமுகர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனுக்கு வரும் தேர்தலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணனுக்கு விழுந்த ஓட்டுகள் கூட கிடைக்காது

ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய பிரபல காமெடி நடிகர்.. வைரல் செல்பி!!!

தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாவும் நடித்து வருகிறார்.

105 நாட்கள் இருந்த பாலாஜிக்கு கிடைத்த மொத்த தொகை இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வெற்றிபெற்றவர் பாலாஜி என்பதும் இவர் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே

24 பேரை காவு வாங்கிய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி சென்னையில் கைதா?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி விஷச்சாரயம் அருந்தி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொய்ப்பணத்தை இப்படியும் வசூலிக்கலாமா? அசத்தும் புது ஜோடி!!!

மாமன் சீர் மாதிரி மொய்ப்பணமும் ஒருவரின் கவுரவத்தையே எடுத்துக் காட்டுகிறது