இதுதான் விஜய்யின் பவர்: 'மாஸ்டர்' படத்தை வாங்கிய நிறுவனத்தின் பரபரப்பான டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
’மாஸ்டர்’ படத்தின் தமிழக உரிமை மற்றும் கேரள, கர்நாடக, தெலுங்கு மாநிலங்களின் உரிமைகளும், வெளிநாட்டு உரிமைகளும், சாட்டிலைட் உரிமையையும், டிஜிட்டல் உரிமையும் விற்பனையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்படம் உருவாகி கொண்டிருக்கும்போதே உலக அளவில் விற்பனை முடிவடைந்து என்பது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இதுதான் விஜய்யின் பவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை ஒரு மிகப்பெரிய தொகையை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. ’மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நாங்கள் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம். ’மாஸ்டர்’ படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை, ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை, இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கூட வெளியாக வில்லை. ஆனால் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Master movie rights for worldwide was sold out within 2 days while only having its first look released. There was no teaser, trailer or other casts looks announced. This defines the urge for the big release on April 2020.#Master #malikstreams #msc #vijay #VijaySethupathi pic.twitter.com/QzuWlFdyoO
— Malik Streams (@malikstreams) January 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout