தப்போட சைஸ் பெரிசாவும், தண்டனையோட சைஸ் சிறுசாவும் இருக்க கூடாது: 'மாஸ்டர்' நீக்கப்பட்ட காட்சி

  • IndiaGlitz, [Sunday,February 07 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை அடுத்து அமேசான் பிரைம் ஐந்து நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த காட்சியில் தற்போது தப்போட சைஸ் பெரிசாவும், தண்டனையோட சைஸ் சிறுசாவும் இருக்க கூடாது என்ற விஜய் பேசும் வசனம் உள்ளது. கல்லூரி மாணவியான கௌரி கிஷானிடம் சக மாணவர்கள் முறைகேடாக நடந்து கொள்ள, இது குறித்த விசாரணை கல்லூரி நிர்வாகத்தின் முன் நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தையில் மாணவர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, சமாதானமாக செல்ல கௌரி கிஷான் பெற்றோர்களும் முடிவு செய்தனர்.

இது குறித்து கேள்விப்பட்ட விஜய் நேராக விசாரணை நடக்கும் இடத்திற்கு வந்து கெளரி கிஷான் தாயாரிடம் ’தப்போட சைஸ் பெரிசாவும், தண்டனையோட சைஸ் சிறுசாவும் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் வகையில் இருக்கும்’ என்று கெளரி கிஷானின் தாயாருக்கு விலக்கியதை அடுத்து அந்த பெண் ’போலீசுக்கு போன் பண்ணுங்க’ என்று கூறுவதோடு அந்த காட்சி முடிவடைகிறது.

இந்த காட்சியில் தளபதி விஜய்யை கல்லூரி நிர்வாகத்தினர் மாறி மாறி அனைவரும் விமர்சனம் செய்ய கடைசியில் விஜய் பேசும் அந்த இரண்டு நிமிட வசனம் இந்த காட்சியின் ஹைலைட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.