அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி: 'மாஸ்டர்' மாளவிகாவுக்கு ரசிகரின் கமெண்ட்!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கலன்று ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து எந்தவித கவலையும் இன்றி அந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் மளமளவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மாளவிகா மோகனன் ஏற்கனவே பாலிவுட் ஆக்சன் படம் ஒன்றிலும் வெப்தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவரான மாளவிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வரும் மாளவிகா மோகனன் திடீரென தற்போது அமைதியாக உட்கார்ந்து யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’மனம் அமைதியாக இருக்கும் போது, எவ்வளவு விரைவாக, எவ்வளவு சீராக, எவ்வளவு அழகாக நீங்கள் எல்லாவற்றையும் உணர்வீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ’அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் அளித்துள்ளார்

More News

10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா போன்ற ஒருசில நடிகைகளை தவிர பெரும்பாலான நடிகைகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருப்பார்கள்.

'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் பலமுறை உறுதி செய்து இருந்தனர்.

ஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்!!!

கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கு வடகொரிய அரசு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.

எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து!!!

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒருநாட்டின் அதிபர் மட்டும் எனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறியதோடு