இணையத்தை சூடாக்கிய மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!  

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது அவர் தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் மாளவிகா மோகனன், சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கவர்ச்சியின் உச்சகட்டமாக இருப்பதாக கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஒரு பக்கத்தில் மட்டும் சேலையை போர்த்தி கொண்டு படு கிளாமராக அவர் பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ‘இப்படி ஒரு அழகை இதுவரை நான் பார்த்ததில்லை என்றும், என்னை மூச்சு விடாமல் செய்து விட்டீர்கள் என்றும் எனக்கு ஆத்மா பிரச்சனையை கொடுத்ததற்கு நன்றி என்றும் நெட்டிசன்கள் உருகி உருகி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பதிவு செய்த சில மணி நேரங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.