ஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடைந்து விடும் என்பதால், அதன் பின் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் அல்லது டீசர் எப்போது வரும் என்று அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன் தனது ட்விட்டர் வலைதளத்தில் ’ஏப்ரல் 14ல் நல்ல அப்டேட் வரும் என்றும் நானும் ஒரு ரசிகராக அந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்

இதனை அடுத்து நெட்டிசன்கள் ஏப்ரல் 14ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் வரவிருப்பதாக செய்தியை பரப்பி, அதனை டிரண்டுக்கும் கொண்டு வந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாஸ்டர் மகேந்திரன் மீண்டும் ஒரு டுவிட்டில் ’எப்பா ராசா ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு என்பதால் ஒரு கணக்கில் நான் சொன்னேன். ஒரு ரசிகனா நானும் உங்களை மாதிரிதான் ட்ரைலருக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். மத்தபடி எனக்கு ஒண்ணுமே தெரியாது’ என்று கூறினார்

மாஸ்டர் மகேந்திரனின் இந்த டுவிட்டை நடிகர் சாந்தனு கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வரும் என்பது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது தான் உண்மை

More News

பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தனக்குத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்

இன்று ஒரே நாளில் 15 பேர்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவச வாகன சேவை செய்யும் சென்னை இளைஞர்

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி சரியாக கிடைக்காத நிலையில் சென்னையில் இளைஞர் ஒருவர் இலவச வாகன சேவை செய்து வருகிறார்.

இன்று கொரோனாவால் பாதித்தவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ் தகவல் 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான உதவி

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு பலருக்கு