'லியோ' விஜய்யின் இண்ட்ரோ காட்சியை காண்பித்துவிட்டு, தண்டனையும் கொடுத்த லோகேஷ்.. மாஸ்டர் நடிகர் புலம்பல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சமீபத்தில் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் சென்றதாகவும் அப்போது லோகேஷ் கனகராஜ் ’லியோ’ படத்தில் விஜய்யின் இண்ட்ரோ காட்சியை பார்க்க விருப்பமா? என்று கேட்டதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு ‘இல்லை நான் பார்க்க விரும்பவில்லை, ஏனெனில் என் வாய் சும்மா இருக்காது, யாரிடமாவது கூறி விடுவேன் என்று மாஸ்டர் மகேந்திரன் கூற, ‘உனக்கு நான் அந்த இண்ட்ரோ காட்சியை காண்பிக்கிறேன், ஆனால் அதை நீ யாரிடமும் சொல்லக்கூடாது, இதுதான் உனக்கு தண்டனை என்று கூறி இண்ட்ரோ காட்சியை காட்டியதாக மாஸ்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாஸ் காட்சியை யாரிடமும் சொல்ல முடியாத நிலை உள்ளது என்றும் அவர் புலம்பியுள்ளார்.
தளபதி விஜய்யின் இண்ட்ரோ காட்சி நிச்சயமாக மாஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாஸ்டர் மகேந்திரனின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout