ஷூட்டிங் எப்போ டைரக்டர்? தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? என தனுஷ் படத்தின் இயக்குனரிடம் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதி ஆக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஒரு சில காட்சிகளில் மட்டும் இவர் அந்த படத்தில் தோன்றினாலும் அவருக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தனுஷ் 43’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் அதன்பின்னர் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் கார்த்திக் நரேனிடம் ‘D43’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது இயக்குனர்? உங்கள் போன் காலுக்காக வெயிட்டிங் என்று கூறியிருந்தார். அதற்கு நரேன் கார்த்திக் நரேன் ’மிக விரைவில் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Insta la irrundhu ippo twitter ku vandhurucha ???? https://t.co/PogTA6tV1H
— Master Mahendran ?? (@Actor_Mahendran) May 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com