ஹீரோவான 'மாஸ்டர்' மகேந்திரன்: டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சரத்குமார் நடித்த ’நாட்டாமை’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரை பல படங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
’நாட்டாமை’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் அதன் பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியின் பவானி கேரக்டரில் மகேந்திரன் நடித்திருந்தார் என்பதும், அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் ’மாஸ்டர்’ மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘கரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அவதார் என்பவர் எழுதி இயக்க இருப்பதாகவும் ராஜேஷ் குமார் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சு ராஜாமணியின் இசையில், வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், கிரேசன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Hey guys this is for u ❤ #karaa TL ??
— Master Mahendran ?? (@Actor_Mahendran) January 21, 2022
1st look soon ?? Love u all ❤
Directed by #DirectorAvatar Produced by #ProducerRajeshKumar@ProducerRajesh @directoravatar @achurajamani @NithishPro @ntalkies_offl pic.twitter.com/VYl3SMLXea
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments