மாஸ்டர் பாடல் எழுதிய அனுபவம்: பாடலாசிரியர்களின் பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர்.
அருண்ராஜா கூறியபோது, ஒரு குட்டி ஸ்டோரி பாடலை எழுத சென்னைக்கு விழுப்புரத்தில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்த பாடலை சென்னை வரும் வழியிலேயே எழுதினேன். எனக்கு அவ்வப்போது ஊக்கத்தை கொடுத்தது ‘லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா’ என்ற விஜய்யின் வரிகள் தான். அந்த ஊக்கத்தினால் தான் அந்த பாடலை எழுதினேன். எனக்கு இந்த படத்தில் பாடல் எழுத வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்று கூறினார்
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியபோது, ‘நான் எழுதிய பாடல் பற்றி கூற வேண்டுமானால் இது ஒரு காதல் பாடல். இந்த பாடலை கொஞ்சம் உற்று கவனித்தால் என்னுடைய காதல் தெரியவரும். அதாவது விஜய் மீது நான் வைத்துள்ள அன்பு தெரிந்து வரும். விஜய் அவர்களுக்கு மிகவும் பொருந்தும் வகையில் பாடல் எழுதியிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அனிருத் ஒவ்வொரு பாடலிலும் தனது முழு திறமையை காட்டியுள்ளார். ‘கத்தி’ படத்தின் இசை வெளீயீட்டின்போது ஒரு ஓரமாக நின்று பார்த்தேன். இன்று இந்த மேடையில் நிற்க வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் எழுதிய விஷ்ணு, இந்த படத்தின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: இந்த பாடலை எழுதும்போது எனக்கு பயமில்லை. ஆனால் இந்த பாடலை லோகேஷ் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் போது மிகவும் பயமாக இருந்தது. விஜய் படத்தில் ஒரு பாடலை எழுத வாய்ப்பு கிடைத்தவுடன் என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் நான் போன் செய்து எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். இன்று இன்று இந்த மேடையில் நிற்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கின்றது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments