'மாஸ்டர்' படத்தின் டைட்டில் இதுதான்: பாலிவுட்டில் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக தயாராகி விட்டது என்பதும் இந்த படம் சென்சாரில் ’யுஏ’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் அந்த டிரைலரில் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் விஜய் நடித்த திரைப்படம் முதல் முறையாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் விஜய்யின் பான்-இந்தியா திரைப்படமாக ’மாஸ்டர்’ திரைப்படம் இருக்கும் என்று கருதப்படுகிறது
இந்த நிலையில் பாலிவுட் திரையுலக பிரமுகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் கூறியுள்ளார்
மேலும் இந்த படத்திற்கு ஹிந்தியில் ’விஜய் தி மாஸ்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டைட்டில் பாலிவுட்டில் வைரலாகி வருகிறது. ஒரே நேரத்தில் பல இந்திய மொழிகளில் ’மாஸ்டர்’ வெளியாவதால் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இசையில் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்
#VijayTheMaster is here to shatter your screens! ??
— XB Film Creators (@XBFilmCreators) December 26, 2020
Happy to associate with @B4UMotionPics for #MasterInHindi! ??#Master pic.twitter.com/0X3fxaCQSH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com