மாஸ்டர் நாயகி கிடைத்த பாலிவுட் வாய்ப்பு: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்திற்கு பின் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே முன்னணி நடிகர்களுடன் நடிக்க மாளவிகா மோகனன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ என்ற திரைப்படத்தை பாலிவுட்டில் ரிலீஸ் செய்த பிரபல தயாரிப்பாளர் ஃபர்கான் அக்தர் என்பவர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் மாளவிகா மோகனன் பாலிவுட்டில் எண்ட்ரி ஆகிறார் என்பது உறுதியாகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நாயகன் உள்பட மற்ற கேரக்டர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் நாயகிக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

விஜய்சேதுபதி அறிவித்த சூர்ப்பநகை டைட்டில்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இன்று தனது சமூக வலைத்தளத்தில் ரெஜினா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..?

ஷாவ்மியின் ரெட்மி நோட் சீரிஸ் அதன் மலிவான விலைக்காக பிரபலமாக இருப்பதால், ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டும் ரூ.20,000 விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போயிடுவேன்னு நினச்சீங்களா.. அது, மகளிர் தினத்துக்கான சிறப்பு பதிவு..! நரேந்திர மோடி.

மோடி, சமூக வலைதளத்தில் இருந்து விலகப்போவதாக சொன்னதற்கான சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.    

புத்திசாலித்தனத்தால் திருடனை விரட்டி அடித்த இளம் பெண்..! வீடியோ.

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது புத்தி சாதுரியத்தால் திருடனை விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்.. நொய்டாவில் இரண்டு பள்ளிகள் மூடல்..!

டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் குழந்தை நொய்டாவில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில் படித்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டியுள்ளனர்.