விஜய்யின் 'மாஸ்டர்' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்தார்கள் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு விட்டதால் வெகு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்று முன் ‘மாஸ்டர்’ பட குழுவினர் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது என உறுதி செய்துள்ளனர். ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக விரைவில் சந்திப்போம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் விஜய் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது
And it's here! ??
— XB Film Creators (@XBFilmCreators) December 24, 2020
U/A certification for namma #Master.
See you soon ?? #MasterUAcertified pic.twitter.com/RLH81FnFVt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com