மாஸ்டர் பட நாயகியின் பொங்கல் வைப்ஸ்… வைரல் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இதில் நாயகியாக நடித்து இருக்கும் மாளவிகா மோகனன் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் சமூக வலைத்தளத்திலும் இவரைத் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோ மற்றும் புகைப்படங்களும் வைரலை ஏற்படுத்தும் அளவிற்கு மாஸ்டர் படத்தின் மூலம் தமிழின் முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார்.
இவர் தமிழில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட“ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இவருக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்து இருக்கிறது. இதனால் படு சந்தோஷத்தில் இருக்கும் மாளவிகா மோகனன் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு உரையாடுவதோடு தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாளவிகா மோகனன் கேரளா ஸ்டைல் உடையை அணிந்து இந்தப் பொங்கலில் நன்றி சொல்ல ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மேலும் அனைவருக்கும் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகள் எனத் தெரிவித்து உள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஏற்கனவே மலையாளத்தில் கடந்த 2013 இல் துல்கர் சல்மானுடன் “பட்டம் போலே” மற்றும் “நிர்ணநாயகம்” “தி கிரேட் பாதர்” போன்ற சில படங்களில் நடித்து அங்கும் முத்திரை பதித்து இருக்கிறார்.
கன்னடத்தில் “நானு மட்டும் வரலஷ்சுமி” என்ற படத்திலும் அதேபோல ஹிந்தி, மற்றும் தெலுங்கிலும் சில படங்களை நடித்து அனைத்து திரைத்துறையிலும் தனது உற்சாகமான துவக்கத்தை ஆரம்பித்து விட்டார். கேரளத் திரைத்துறையில் பிரபல ஒளிப்பதிவானரான கே.யு.மோஹனனின் மகள் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தையின் அறிமுகத்தில் சில படங்களில் மட்டுமே நடித்து பெரும் அடையாளத்தை பெற்றிருக்கும் இவருக்கு சினிமா துறையில் எப்படி ஜொலிக்க வேண்டும் என்ற தந்திரம் நன்றாகவே தெரிந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com