'மாஸ்டர்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமா? படக்குழுவினர் விளக்கம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிய பின்னர், திரை அரங்குகள் திறந்த பின்னரே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் ஆகிவிட்டதாகவும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் மற்றும் இரண்டு நிமிடங்கள் என்றும் சமூக வலைதளங்களில் சென்சார் சான்றிதழ் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் சிலர் இந்த படம் சென்சார் ஆகிவிட்டதாக செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து மாஸ்டர் பட குழுவினர் கூறிய போது ’’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சென்சார் சான்றிதழ் போலியானது என்றும் எனவே அதனை விஜய் ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் ஆனபின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே நெட்டிசன்கள் யாரோ சிலர் போலியான ’மாஸ்டர்’ சென்சார் சான்றிதழை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

கமல், மணிரத்னம் படங்களுக்கு பணி செய்யும் பிரபல நடிகரின் நிறுவனம்

கோலிவுட் திரையுலகில் உருவாகி வரும் பிரமாண்ட படங்களில் கமலஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் மணிரத்னம் அவர்களின் 'பொன்னியின் செல்வன்' ஆகியவை என்பது தெரிந்ததே.

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும்

சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

மணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில்