'மாஸ்டர்' இயக்குனரின் திடீர் விசிட்: பிரபல நடிகரின் மகன் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாநகரம் மற்றும் ’கைதி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்கும் ’ஹிருதயம்’ என்ற மலையாள படட்தை நடிகர் வினித் சீனிவாசன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடப்பதை கேள்விப்பட்ட மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென விசிட் அடித்தார். லோகேஷ் கனகராஜ் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததை அறிந்ததும் ’ஹிருதயம்’ படக்குழுவினர் ஆச்சரியமடைந்தனர். உடனடியாக படக்குழுவினர் அனைவரும் லோகேஷ் கனகராஜ் உடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து வினீத் சீனிவாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’மாஸ்டர் இயக்குனர் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ளதைப் பெருமையாக கருதுகிறோம். மேலும் உங்களுடைய ’மாஸ்டர்’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆல் தி பெஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments