'மாஸ்டர்' இயக்குனரை வளைக்க தயாராகும் அண்டை மாநில மாஸ் நடிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது திரைப்படமான ’கைதி’ என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவருடைய மூன்றாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதும் தளபதி விஜய்யுடன் இணைந்த ’மாஸ்டர்’ படத்தின் வெற்றியை அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ’விக்ரம்’ படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த வெற்றியைப் பார்த்த அண்டை மாநிலமான மாஸ் நடிகர்கள் அவரை வளைக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண்தேஜாவுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு கதை கூறியிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியபோது ராம்சரண் அவர்களுக்கு கதை கூறியது உண்மைதான் என்றும் ஆனால் அந்த படம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்துவிட்ட பிறகே ராம்சரண் படம் குறித்து எதுவும் சொல்ல முடியும் என்றும் கூறினார்

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செல்லவிருப்பதால் அவர் விரைவில் பாலிவுட்டில் படம் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.
 

More News

விஜய் தந்தை குறித்து பிக்பாஸ் நடிகை கூறியது என்ன? வைரல் புகைப்படங்கள்

விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 'நான் கடவுள் இல்லை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி மற்றும் சாக்சி அகர்வால் நடித்து வருகின்றனர்

டீ கடையில் நின்று தம் அடிக்கும் சிறுவர்களே உஷார்… எச்சரிக்கும் புது சட்டம்!!!

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை மத்திய அரசு அதிரடியாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறது

பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!

பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில்

உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது