நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்த அஜித்-விஜய் பட இயக்குனர்கள்! வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தை இயக்கி வரும் எச்.வினோத் ஆகிய இருவரும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் தங்களது படங்களில் கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த நிலையில் நேரில் சந்திக்க முடியாத நிலையில் தற்போது இருவரும் சந்தித்துள்ளனர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சகோதரர் வினோத் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் எச்.வினோத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
இளையதலைமுறை இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் எச்.வினோத் ஆகிய இருவரும் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் படங்களை இயக்க வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Good time spent with #Vinoth anna after years! #Brotherhood?? pic.twitter.com/ovcKugV0Hu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments