இணையத்தில் வைரலாகும் விஜய் பைக் சேசிங் காட்சி

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஜய்யின் பைக் சேசிங் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் பைக் ஓட்டும் காட்சி இந்த வீடியோவில் உள்ளது. போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில், பைக்கில் விஜய் சேஸ் செய்யும் காட்சி உள்ள வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இது மாஸ்டர் படத்தின் காட்சி என்று ஒருசிலரும், ஒருசிலர் இது பிகில் படத்தின் காட்சி என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது. விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.