'மாஸ்டர்' ஆடியோ விழாவின் மாஸ் டிரைலர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் இந்த விழாவை சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளதால் கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த இசை வெளியீட்டு விழாவை தொலைகாட்சிகளில் கண்டு ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவை வரும் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கும் சன் டிவி, இதுகுறித்த ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் பார்ப்பது போன்ற காட்சிகள் உள்ளது. மாஸாக இருக்கும் இந்த டிரெய்லர் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு டிரைலர் வெளியிட்டது குறித்து விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.
Nanbas and Nanbis, get ready to watch the #MasterAudioLaunch with your friends and family this time live on @SunTV#MasterUpdate #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah pic.twitter.com/RbkUjeHL5E
— XB Film Creators (@XBFilmCreators) March 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com