'மாஸ்டர்' ஆடியோ விழாவின் மாஸ் டிரைலர்!

  • IndiaGlitz, [Monday,March 09 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் இந்த விழாவை சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளதால் கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த இசை வெளியீட்டு விழாவை தொலைகாட்சிகளில் கண்டு ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவை வரும் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கும் சன் டிவி, இதுகுறித்த ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் பார்ப்பது போன்ற காட்சிகள் உள்ளது. மாஸாக இருக்கும் இந்த டிரெய்லர் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு டிரைலர் வெளியிட்டது குறித்து விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

More News

சசிகலா நிலைமை ரஜினிக்கு வரக்கூடாது: தமிழருவி மணியன் பேச்சு

சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு வரக்கூடாது என்று ரஜினிக்கு வலியுறுத்தினேன் என தமிழருவி மணியன் கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய 'திரெளபதி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பல அரசியல்வாதிகள்

மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் பெண் கைது 

பொலிவியா சேர்ந்த பெண்ணொருவர் மர்ம உறுப்பில் மறைத்து வைத்து கோகைன் கடத்திய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மகளிர் தினத்தில் ஜோதிகா படக்குழுவினர்களின் சிறப்பு அறிவிப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் 'ராட்சசி' 'ஜாக்பாட்' மற்றும் 'தம்பி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக் கூறும் டிப்ஸ்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்