பீச், பிங்க் கலர், சன் செட்: 'மாஸ்டர்' நாயகியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

கடற்கரை ஒன்றில் சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிங்க் நிற உடை அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கும் மாளவிகா மோகனின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் நகைச்சுவையான மற்றும் ரொமான்ஸ் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாஸ்டர்’ படத்தை அடுத்து அதிரடி ஆக்ஷன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும், சூர்யாவின் அடுத்த படத்திலும் அவர் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ படம் வெளியானவுடன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகள் பட்டியலில் மாளவிகா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

View this post on Instagram

This is how happy sunsets make me ?? ?? @pratik8shah

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Sep 29, 2020 at 8:34am PDT