close
Choose your channels

ஆக்சன் படப்பிடிப்பின்போது 'மாஸ்டர்' மாளவிகா மோகனன் காயம்: வைரல் புகைப்படங்கள்

Monday, November 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருந்தார் என்பதும் தற்போது அவர் ’மாறன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியில் உருவாகி வரும் ’யுத்ரா’ என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது ஒரு ஆக்ஷன் காட்சியில் மாளவிகா மோகனன் நடித்த போது கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள மாளவிகா மோகனன், ‘நீங்கள் ஒரு ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது காயங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் லேசான கீறல்களாக உணர முடியும்’ என பதிவு செய்துள்ளார். மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment