படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: 'நச்' பதிலளித்த 'மாஸ்டர்' நடிகை!

  • IndiaGlitz, [Sunday,March 20 2022]

தன்னை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர் ஒருவருக்கு ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை ‘நச்’ என பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் பகல் நிலவு தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் பேராசிரியையாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இவரிடம் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாக கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பாக படுக்கைக்கு வந்தால் எவ்வளவு வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து பேராசிரியருக்கு பதிலளிக்கும் வகையில், இவர் மதுரையில் உள்ள பேராசிரியர் என்ற இவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் உள்ளது. இவருடைய கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன், எதற்கும் இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என ‘நச்’ என பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் நடிகை செளந்தர்யா பதிவு செய்து உள்ள நிலையில் அந்தப் பேராசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.