பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'மாஸ்டர்' நடிகரும் ஒரு போட்டியாளரா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த ஒருவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வது சீசனில் போட்டியாளர் என செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் உள்பட ஒரு சிலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யின் மாணவராக நடித்த சிபி சந்திரன் என்பவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை அக்டோபர் 3ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.